பாகிஸ்தானில் தனக்கு மரண தண்டனை விதிக்கும் நிலை உருவாகியுள்ளதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெட்டா என்ற நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் பேஸ்புக் சமூக வலைதளத்தில் மதநிந்தனை பதிவுக்காக தன் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் முயற்சி செய்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
பேஸ்புக்கில் ஒருவர் நபிகள் நாயகத்தின் உருவத்தை வரைந்ததாகவும், அதற்காக தன் மீது பாகிஸ்தானில் வழக்கு தொடரப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். "நான் பாகிஸ்தானுக்கு செல்லப்போவதில்லை, எனவே அதைப் பற்றி கவலைப்படவில்லை," என்றும் அவர் கூறினார்.
"பல நாடுகளின் உள்ளூர் விதிமுறைகளை மதித்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம். அதே நேரத்தில், கருத்து சுதந்திரத்தை உறுதி செய்வதும் ஒரு சவாலாக உள்ளது," என்றும் அவர் தெரிவித்தார்.
பேஸ்புக் நிறுவனத்துக்கு பாகிஸ்தான் மரண தண்டனை வழங்க இருப்பதாக கூறியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.