வரும் 19 ஆம் தேதி தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. முதலில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பின்னர் பிசிசிஐ மற்றும் ஐசிசி கொடுத்த நெருக்குதால் ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக் கொண்டது. அதனால் இந்தியா அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடத்தப்படவுள்ளன.
இந்த தொடரில் இந்திய அணி பல குடைச்சல்களை ஐசிசிக்குக் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஐசிசி நடுவர் குழுவில் இருக்கும் நிதின் மேனன் மற்றும் போட்டி நடத்துனர் ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளனர். இதனால் இந்த தொடரில் இந்திய நடுவர்கள் மற்றும் ரெஃப்ரீக்கள் யாரும் இடம்பெறவில்லை.
கள நடுவர்கள்: தர்மசேனா (இலங்கை), கிறிஸ் கபானி (நியூசிலாந்து) மைக்கேல் காப், ரிச்சர்டு கெட்டில் போரோ, அலெக்ஸ் ஹர்ப் (இங்கிலாந்து) அட்ரியன் ஹோல்ஸ்டாக் (தென் ஆப் பிரிக்கா) பால் ரீபெல், ரோட்னி டக்கர் (ஆஸ்திரேலியா), அசன் ராசா (பாகிஸ்தான்) ஷர்பதுல்லா (வங்கதேசம்), ஜோயல் வில்சன் (வெஸ்ட் இண்டீஸ்)
போட்டி ரெஃப்ரீக்கள்: டேவிட் பூன் (ஆஸ்திரேலியா), ரஞ்சன் மதுகல்லே (இலங்கை), ஆண்ட்ரூ பைகிராப்ட் (ஜிம்பாப்வே).