பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

Siva
வெள்ளி, 21 நவம்பர் 2025 (17:49 IST)
அமெரிக்காவின் சிஐஏ முன்னாள் அதிகாரியான ஜான் கிரியாகோ , இந்தியா, பாகிஸ்தானின் ராணுவ பலம் குறித்து கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்காக மன்னிப்பு கோரிய பாகிஸ்தான் கட்சிக்கு ’முடியாது, நான் கூறியது சரிதான்’ என பதிலடி கொடுத்துள்ளார்.
 
கடந்த அக்டோபரில் பேசிய கிரியாகோ, "வழக்கமான போரில் இந்தியா பாகிஸ்தானை எளிதில் வீழ்த்திவிடும், இந்தியாவை சீண்டுவதில் பாகிஸ்தானுக்கு எந்த பயனும் இல்லை," என்று கூறியிருந்தார். இந்த கருத்து பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பை உருவாக்கியது.
 
இதையடுத்து, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியிடம் இருந்து, உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் என்று கோரும் மின்னஞ்சல் கிரியாகோவுக்கு வந்தது.
 
சமீபத்திய பாட்காஸ்ட் ஒன்றில் இதுகுறித்து விவரித்த கிரியாகோ, மன்னிப்பு கோரிய அந்த கடிதத்திற்கு, "உங்கள் கடிதங்களை நான் கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்" என்று காட்டமாக பதிலளித்ததாகத் தெரிவித்தார். அதன்பிறகு பாகிஸ்தானிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

துபாய் விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் விபத்து: விமானி பரிதாப பலி

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மதுரையில் மெட்ரோ ரயில் ஓடும்: செல்லூர் ராஜூ

விஜய் எங்க வீட்டுப்பிள்ளை.. கோத்துவிடாதீங்க!... பிரேமலதா விளக்கம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments