இந்தியா உள்பட பல நாடுகளில் சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை என இங்கிலாந்து அறிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருவதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் உலகில் உள்ள பல நாடுகளில் சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவித்துள்ள நிலையில் இங்கிலாந்து வரும் சீன பயணிகளுக்கு அடுத்த வாரம் முதல் கொரோனா பரிசோதனை தேவையில்லை என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது
இங்கிலாந்து வரும் சீன பயணிகள் தாங்களாகவே பரிசோதனை செய்துகொள்ளலாம் என்றும் பரிசோதனை கொரோனா உறுதி செய்யப்பட்டாலும் அவர்கள் தனிமை படுத்த மாட்டார்கள் என்றும் இங்கிலாந்து அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.