இயக்குனர் முத்தையா தென் தமிழகக் கதைகளன்களை தன்னுடைய படத்தில் எடுத்தாண்டு தொடர்ந்து படங்களைக் கொடுத்து வருகிறார்.
சசிக்குமார் நடித்த குட்டிப் புலி மற்றும் கார்த்தி நடித்த கொம்பன் ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா, அவர் படங்களில் சாதியக் கருத்துகள் இடம்பெற்று வருவதாக ஒரு குற்றச்சாட்டு அவர் மேல் வைக்கப்படுகிறது. ஆனாலும் தென் மாவட்டங்களில் அவர் படங்கள் நல்ல வெற்றியைப் பெறுகின்றன.
சமீபத்தில் அவர் இயக்கிய விருமன் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதையடுத்து ஆர்யாவை கதாநாயகனாக்கி காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கோவில்பட்டியில் நடந்து வருகிறது.
இதையடுத்து முத்தையா தன்னுடைய மகனை கதாநாயகனாக்கி ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என சொல்லப்படுகிறது.