Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கையில் அவசர நிலை அறிவிப்பு –இதுவரை 24 பேர் கைது !

இலங்கையில் அவசர நிலை அறிவிப்பு  –இதுவரை 24 பேர் கைது !
, திங்கள், 22 ஏப்ரல் 2019 (15:43 IST)
இலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்பை அடுத்து இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை அமல்படுத்த இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் நேற்று ஈஸ்டர் பண்டிகை நாடெங்கும் கொண்டாடப்பட்ட வேளையில் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  தாக்குதலுக்கு இதுவரை 290 உயிர் இழந்துள்ளனர். மேலும் 500 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து இதுவரை 24 பேர் இந்த தாக்குதலுக்குக் காரணமானவர்கள் எனக் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர இன்று நள்ளிரவு முதல் இலங்கையில் அவசரநிலை பிரகரனப்படுத்த இருப்பதாக அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

இந்த தாக்குதல்களில் ஏராளமான வெளிநாட்டினரும் உயிரிழந்திருக்கின்றனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரைப் பொறுப்பேற்கவில்லை. மிகச்சிறிய நாடான இலங்கையில் சமீப சில ஆண்டுகளாகத்தான் போருக்குப் பின்னான இயல்புநிலைக்கு திரும்பி கொண்டிருந்தனர். இந்நிலையில் நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்துள்ள இந்த தாக்குதல்கள் மீண்டும் தீவிரவாத அச்சத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர் குண்டுவெடிப்பில் 290 பேர் பலி உயர்வு : நாளை தேசிய துக்கதினம் - இலங்கை அரசு