Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கை தொடர் வெடிகுண்டு சம்பவம்: 5 இந்தியர்கள் பலி என தகவல்

Advertiesment
இலங்கை தொடர் வெடிகுண்டு சம்பவம்: 5 இந்தியர்கள் பலி என தகவல்
, திங்கள், 22 ஏப்ரல் 2019 (08:48 IST)
நேற்று காலை முதல் இலங்கையில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாகவும், 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் இந்த தாக்குதலில் 3 இந்தியர்கள் பலியாகியிருப்பதாக நேற்று மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த பலி எண்ணிக்கை இன்று ஐந்தாக உயர்ந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இலங்கை தொடர் வெடிகுண்டு சம்பவத்தில் லஷ்மி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ் ஆகிய மூன்று இந்தியர்கள் பலி என நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் இருவர் பலியாகியுள்ளனர் என்ற தகவல் இந்தியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பலியான இரண்டு இந்தியர்களின் பெயர்கள் ஹனுமந்த்ராயப்பா மற்றும் ரங்கப்பா என மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.
 
webdunia
மேலும் இலங்கையில் உள்ள இந்தியர்கள் குறித்தும் காயம் அடைந்தவர்கள் குறித்தும் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் +94777903082, +94112422788, +94112422789 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும் இந்த குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்கள் உள்ளிட்ட அனைவரின் குடும்பத்தினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உக்ரைனின் அதிபராகிறார் பிரபல நகைச்சுவை நடிகர்