மியான்மரில் அவசரநிலை பிரகடனம்: ராணுவம் அதிரடி அறிவிப்பு
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான மியான்மரில் திடீரென ராணுவ புரட்சி ஏற்பட்டதாகவும் அந்நாட்டின் முக்கிய அதிகார தலைவராக இருந்த ஆங் சான் சூகி உள்பட பல தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டதாகவும் வெளிவந்த தகவலை சற்றுமுன் பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி மியான்மரில் ஒரு ஆண்டுக்கு அவசர நிலை பிரகடனம் என அந்நாட்டின் ராணுவம் அறிவிப்பு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மியான்மரில் ஏற்பட்ட திடீர் ராணுவ புரட்சியின் காரணமாக ஆங் சான் சூகி உள்பட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மியான்மரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் மியான்மர் நாட்டின் ராணுவ புரட்சி குறித்து இந்தியா உள்பட அண்டை நாடுகள் ஆலோசனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது