படிப்பு, பட்டம் தேவையில்லை.. வேலை தெரிந்தால் வாருங்கள்: எலான் மஸ்க் அழைப்பு..!

Mahendran
வியாழன், 16 ஜனவரி 2025 (11:45 IST)
பள்ளி படிப்பு அல்லது பட்டப்படிப்பு தேவையில்லை; வேலை தெரிந்தால் போதும். என்னிடம் வேலைக்கு வாருங்கள் என  வேலையில்லாத இளைஞர்களுக்கு எலான் மஸ்க் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாப்ட்வேர் இன்ஜினியர் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர் என்றும், இந்த வேலைக்கு பள்ளி படிப்பு மற்றும் பட்டப்படிப்பு தேவை இல்லை என்றும் தெரிவித்துள்ளார். ஓரளவு வேலை தெரிந்தால் போதும்; என்னிடம் வாருங்கள், நான் வேலைக்கு ஏற்பாடு செய்கிறேன் என உலகின் முன்னணி கோடீஸ்வரர் எலான் மஸ்க் தனது சமூக வலைத்தளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக விரும்பினால் அல்லது விதவிதமான செயலிகளை உருவாக்க ஆசைப்பட்டால், உங்களின் விவரங்களை code@x.comக்கு அனுப்புங்கள். எங்கள் நிறுவனத்தில் இணைந்து நீங்கள் வேலை செய்யலாம்.

நீங்கள் பள்ளிக்கு சென்று படித்திருக்க வேண்டும் என்றோ பெரிய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று இருக்க வேண்டும் என்றோ அவசியம் இல்லை. உங்களிடம் திறமை இருந்தால் போதும். அந்த திறமையை காட்டுங்கள், கை நிறைய சம்பளம் தருகிறேன் என மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

மஸ்கின் இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வது, அவர் விரைவில் வாங்க இருக்கும் டிக் டாக் சமூக வலைதளத்துக்காகதான் என்ற கருத்தும் வெளியாகியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதின் இந்திய வருகையால் டிரம்ப் ஆத்திரம்.. இந்திய அரிசுக்கு வரி விதிக்க திட்டமா?

2 நாளில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் மேல் சரிவு.. என்ன ஆச்சு இந்திய பங்குச்சந்தைக்கு?

புதுவை விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியால் வந்த நபரால் பரபரப்பு.. என்ன நடந்தது?

10 நாட்கள் தங்கம் விலையில் மாற்றமே இல்லை.. எதிர்காலத்தில் ஏறுமா? இறங்குமா?

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments