எல் அண்ட் டி நிறுவன தலைவர் எஸ் என் சுப்பிரமணியம் என்பவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் ஒவ்வொருவரும் 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்றும் ஞாயிற்றுக்கிழமையும் வேலை செய்ய வேண்டும் என்றும் கூறினார். அவரது உரிய வகையில் இருந்த நிலையில் பலரும் பல்வேறு விமர்சனங்களை செய்தனர்.
இந்த நிலையில், L&T நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் L&T நிறுவனம் தேசத்தை காட்டி எழுப்புவதை நோக்கமாக கொண்டுள்ளது. கடந்த எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியாவின் உள்கட்டமைப்பு தொழில்கள் தொழில்நுட்ப திறன்களை வடிவமைத்து வருகிறது. இந்தியாவை முன்னேற்றம் வளர்ந்த நாடாக மாறுவதற்கு எங்கள் பகிரப்பட்ட பார்வையை உணரவும் அர்ப்பணிப்பு மற்றும் கூட்டு முயற்சி தேவை என்பதை தான் எங்கள் தலைவர் கூறியுள்ளார்.
எங்கள் நிறுவன தலைவரின் கருத்துக்கள் பெரிய லட்சியத்தை பிரதிபலிக்கிறது. அசாதாரண விளைவுகளுக்கு அசாதாரண முயற்சி தேவை என்பதை வலியுறுத்தும் வகையில் தான் அவ்வாறு கூறினார். எங்கள் நிறுவனத்தின் ஆர்வம், நோக்கம், செயல் திறன் ஆகியவற்றை நோக்கி 31 நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று கூறியுள்ளார். இந்த விளக்கமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.