Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீங்க லாபம் சம்பாதிக்க.. தொழிலாளர்கள் மனைவியை கேவலப்படுத்துவீங்களா? - L&T நிறுவன தலைவரை வெளுத்த சு.வெங்கடேசன் எம்.பி!

Su Venkadesan

Prasanth Karthick

, வெள்ளி, 10 ஜனவரி 2025 (11:01 IST)

ஊழியர்களை ஞாயிற்றுக்கிழமையும் வேலை செய்ய வைக்க முடியாதது குறித்து தான் வருந்துவதாக L&T நிறுவன தலைவர் பேசியதற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

 

L&T நிறுவன தலைவரான எஸ்.என்.சுப்பிரமணியம் ஊழியர்கள் 90 மணி நேரம் வேலை பார்க்கும் வேண்டுமென கூறி, ஞாயிற்றுக்கிழமை என்ன செய்ய போகிறீர்கள்? எவ்வளவு நேரம் உங்கள் மனைவி முகத்தை பார்த்துக் கொண்டிருப்பீர்கள்? என கேட்டு பேசியிருந்தது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் எஸ்.என்.சுப்பிரமணியத்தின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் “வாரத்தில் 90 மணி நேரம் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டுமென எல் & டி தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியம் பேசியுள்ளார்.

 

தொழிலாளர்கள் 40 மணி நேரம் வேலை செய்தே சுப்பிரமணியத்தின் வருட சம்பளம் 51 கோடி. முந்தைய  வருடத்தை விட 43 சதவிகித உயர்வு. 

 

தான் மேலும் லாபமடைய  தொழிலாளர்கள் 90 மணி நேரம் உழையுங்கள் என்கிறார்.

 

அலெக்ஜாண்டர் தனது கைகளை சவபெட்டிக்கு வெளியே விரித்து வைக்க ஏன் சொன்னார் தெரியுமா?

 

சுப்பிரமணியன்கள் தொடர்ந்து வருவார்கள் என்பதால் தான்.

 

தொழிலாளி 8 மணி நேரத்தை சட்ட உரிமை ஆக்கியது ஏன் தெரியுமா?

 

இது போன்ற அபத்தமான போதனைகளை நிரந்தரமாக சவப்பெட்டியில் அறையத்தான்.

 

நீங்கள் செல்வம் பெருக்க தொழிலாளர்களின் இணையர்களின் முகங்களை கொச்சைப்படுத்தும் துணிவை உங்களுக்கு எந்த லாபவெறி கொடுத்ததோ, அந்த லாபவெறியை முறித்து உங்களையும் மனித சுபாவத்திற்கு பக்கத்தில் கொண்டுவரத்தான் உழைப்பாளிகளின் உரிமையை இந்த உலகம் போற்றி பாதுகாக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்றும் தங்கம் விலை உயர்வு.. ஒரே நாளில் 200 ரூபாய் உயர்ந்ததால் பரபரப்பு..!