Webdunia - Bharat's app for daily news and videos

Install App

64 பேர்களால் தடகள வீராங்கனை பாலியல் வன்கொடுமை.. 52 பேரை கைது செய்த போலீசார்..!

Mahendran
வியாழன், 16 ஜனவரி 2025 (11:00 IST)
கேரளாவில் உள்ள பத்தினம் திட்டா என்ற மாவட்டத்தில், 18 வயது தடகள வீராங்கனை  ஐந்து ஆண்டுகளாக 62 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், தற்போது வரை அதில் 52 பேர்களை கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

13 வயதிலிருந்து 18 வயது வரை, 5 ஆண்டுகள் தனது காதலன், காதலனின் நண்பர்கள், ஆட்டோக்காரர்கள், மீன் வியாபாரிகள் என பலரும் தடகள வீராங்கனையை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக நடத்திய விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட 64 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவர்களின் கைது நடவடிக்கை தொடங்கியது.

வீராங்கனையின் காதலன் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் வரை 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 8 பேர் கைது செய்யப்பட்டு, மொத்தமாக 52 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் வெளிநாட்டில் இருப்பதாகவும், அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லிக்கு ஆரஞ்சு அலர்ட்.. 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்..!

லட்சத்தீவு அருகே நடுக்கடலில் சிக்கி கொண்ட 57 பேர்.. அதிரடியாக மீட்ட இந்திய கடலோர காவல்படை..!

ஈஷாவில் விமரிசையாக கொண்டாடப்பட்ட பொங்கல் திருவிழா! - களைகட்டிய நாட்டு மாடுகளின் கண்காட்சி மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள்!

மூன்றாவது நாளாக பங்குச்சந்தை உயர்வு.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானுக்கு வீடு புகுந்து கத்திக்குத்து! மருத்துவமனையில் அனுமதி!

அடுத்த கட்டுரையில்