சீனாவில் முதுகுவலி சரியாக தவளைகளை விழுங்கிய மூதாட்டி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் உடல் நல பிரச்சினைகளுக்கு அறிவியல்பூர்வமான அலோபதி மருத்துவம் பயன்பாட்டில் இருந்தாலும், அந்தந்த நாடுகளை பொறுத்து சிறுசிறு நாட்டு வைத்தியங்கள், மரபு மருத்துவங்களும் மக்களிடையே புழக்கத்தில் இருந்து வருகிறது. சீனாவின் ஜெய்ஜியாங் பகுதியை சேர்ந்த 82 வயதான ஜாங் என்ற மூதாட்டி கடந்த சில காலமாக தீராத முதுகுவலியால் அவதிப்பட்டுள்ளார்.
அவர் அப்பகுதி மரபு மருத்துவப்படி தவளைகளை விழுங்கினால் முதுகுவலி சரியாகும் என சொல்ல அவரும் சுமார் 8 தவளைகளை பிடித்து சாப்பிட்டுள்ளார். ஆனால் இதனால் அவரது உடல்நிலை நாளாக நாளாக மேலும் மோசமாகத் தொடங்கியுள்ளது. இதனால் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை சோதித்ததில் அவர் சாப்பிட்ட தவளைகளால் அவர் உடலில் கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதுதொடர்பாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Edit by Prasanth.K