இந்த ஆண்டு முழுவதும் சினிமா மற்றும் கார் பந்தயம் என இரட்டைக் குதிரைகளில் பயணித்து வருகிறார் அஜித். தன்னுடைய குட் பேட் அக்லி படம் அடைந்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அஜித்குமார் கடந்த சில மாதங்களாக கார் பந்தயங்களில் ஆர்வமாகக் கலந்துகொண்டு வருகிறார். இனிமேல் வருடத்துக்கு ஒரு படம், மீத நேரத்தில் கார் ரேஸ் பந்தயங்கள் என திட்டம் வகுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
கிடைக்கும் ஓய்வு நேரத்தைக் கூட குடும்பத்தோடு செலவிடுவது மற்றும் மோட்டார் பைக் சாகச சுற்றுலாப் பயணம் என மிகவும் பிஸியாக வாழ்ந்து வருகிறார். இதனால் திரைத்துறையில் இருந்தும் கூட தன்னால் திரைப்படங்களையோ வெப் சீரிஸ்களையோ அதிகமாகப் பார்க்க முடிவதில்லை என அவர் கூறியுள்ளார்.
இது சம்மந்தமாக அவர் “என்னுடைய தினசரி வாழ்க்கை முறையில் என்னால் சினிமா மற்றும் சீரிஸ்கள் பார்க்க நேரம் ஒதுக்க முடியவில்லை. கிடைக்கும் நேரங்களில், விமானங்களில் நான் தூங்கிக் கொண்டிருக்கிறேன். அப்படியே தூங்கினாலும் என்னால் நான்கு மணி நேரத்துக்கு மேல் உறங்க முடியாது. இதனால் என்னுடைய மற்ற செயல்களுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.