ஈகுவடார் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 14 பேர் பலியாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் குயாயாஸ் நகரத்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.8 ஆக பஹிவான இந்த நிலநடுக்கம் 66 கி.மீ புவி ஆழத்தில் உருவாகியுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் ஈகுவடாரில் பல குடியிருப்புகள் சரிந்து தரைமட்டமாகியுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 300க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதை தொடர்ந்து தற்போது பல்வேறு நாடுகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது உலக மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.