Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ்நாட்டில் இருக்கிறோமா அல்லது வெளிநாட்டில் இருக்கிறோமா என்ற சந்தேகம்.! முதல்வர் மு.க ஸ்டாலின்.!!

cm stalin

Senthil Velan

, திங்கள், 5 பிப்ரவரி 2024 (12:51 IST)
பல நாடுகளுக்கு சென்று இருந்தாலும், ஸ்பெயின் நாட்டில் உள்ள தமிழ் மக்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார்.
 
இந்நிலையில் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற தமிழ் கலாச்சார நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் மு.க ஸ்டாலின், இங்குள்ள தமிழர்களை பார்க்கும்போது,  தமிழ்நாட்டில் இருக்கிறோமா அல்லது வெளிநாட்டில் இருக்கிறோமா என்ற சந்தேகம் உள்ளதாக தெரிவித்தார்.
 
ஸ்பெயின் நாட்டிற்கு வருவது இதுதான் முதல் முறை என்றும் ஆனால் பலமுறை வந்தது போல உணவு ஏற்பட்டுள்ளது என்றும் முதல்வர் கூறினார்.
 
பல நாடுகளுக்கு சென்று இருந்தாலும், ஸ்பெயின் நாட்டில் உள்ள தமிழ் மக்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்த அவர், உங்களால் முடிந்த அளவிற்கு தாய் தமிழ்நாட்டிற்கு உதவிகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி, தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ளதாகவும் முதல்வர் மு க ஸ்டாலின் குறிப்பிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தல் தேதியே அறிவிக்கல.. ஆனா வேட்பாளர் பட்டியல் ரெடி? – செம ஸ்பீடில் செல்லும் தமிழக பாஜக!