Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாம் பெறும் வெற்றி இந்தியாவெங்கும் எதிரொலிக்கும் வகையில் களப்பணியாற்றிட வேண்டும்- உதயநிதி

dmk

Sinoj

, சனி, 3 பிப்ரவரி 2024 (21:40 IST)
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால்  நாடு முழுவதும் உள்ள தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஆயத்தப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியா என்ற கூட்டணியில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து பணியாற்றி வரும் நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ்- திமுகவுடன் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்துகிறது.

இந்த நிலையில்,   திமுக கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், மதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தென் சென்னை மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை இன்று காலை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

''கழக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில், வட சென்னை, தென் சென்னை மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை இன்று காலை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டோம். இந்நிலையில், மத்திய சென்னை, திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று மதியம் நடத்தினோம்.

தொகுதிக்குட்பட்ட மாவட்ட அமைச்சர் - மாவட்டக் கழகச் செயலாளர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - மாவட்ட - பகுதி - வட்டக் கழக நிர்வாகிகள் - துணை மேயர் - மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் தேர்தல் தொடர்பான கருத்துக்களை கேட்டறிந்தோம்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கழகத் தொண்டர்களை அதற்காக தயார்படுத்துவது - கள நிலவரம் - மக்களின் கோரிக்கைகள் என பல்வேறு அம்சங்கள் குறித்து கழக நிர்வாகிகள் கூறிய கருத்துக்களை கேட்டறிந்தோம். நாடாளுமன்றத் தேர்தலில் நாம் பெறும் வெற்றி இந்தியாவெங்கும் எதிரொலிக்கும் வகையில் களப்பணியாற்றிட வேண்டும் என உரையாற்றினோம்'' என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணாதுரையின் கொள்கைகளை அவரைத் தலைவர் என்று சொல்லும் கட்சிகள் பின்பற்றுகின்றனவா? அண்ணாமலை