அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் கருத்து கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2016 அமெரிக்க தேர்தலின்போது அமெரிக்க பாலியல் நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுடன் இருந்த தொடர்பை மறைக்கவும், நடிகையின் வாயை மூடவும் அவருக்கு தேர்தல் நிதியிலிருந்து சில மில்லியன் டாலர்களை வழங்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ட்ரம்ப் மீதான குற்றம் உறுதியான நிலையில் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று நியூயார்க் நீதிமன்றத்தில் வைத்து டொனால்டு ட்ரம்ப் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் பெயில் அளிக்கப்பட்டு வெளியே வந்துள்ளார். தான் கைது செய்யப்பட்டது குறித்து பேசியுள்ள டொனால்டு ட்ரம்ப் “அமெரிக்காவில் எனக்கு இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. நான் நிரபராதி. எனக்கு எதிரான வழக்குகளின் குற்றச்சாட்டுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. நம் நாடு நரகத்தை நோக்கி போகிறது. நான் செய்த ஒரே குற்றம் நம் தேசத்தை அழிக்க நினைத்தவர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்றியதுதான்” என பேசியுள்ளார்.