Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலியல் குற்றச்சாட்டு: இங்கிலாந்தில் 3 ஆயிரம் மாணவர்கள் வெளியேற்றம்!

பாலியல் குற்றச்சாட்டு: இங்கிலாந்தில் 3 ஆயிரம் மாணவர்கள் வெளியேற்றம்!
, செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (18:05 IST)
இங்கிலாந்து நாட்டில் பாலியல் துன்புறுத்தல் காரணமாக 3 ஆயிரம் மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து நாட்டில் ரிஷி சுனக் தலைமையிலான  ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில்,  கடந்த 2020 ஆம் ஆண்டில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்தபோது, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால்,  பள்ளிகள், கல்வி நிலையங்கள் மூடப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக கல்வி கற்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் செயல்படத் தொடங்கியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் என்.ஜி.ஓ எனும் ஒரு அமைப்பு பள்ளி, மாணவ,மாணவிகளைப் பற்றிய ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.

அதில்,  பள்ளியில் பயிலும் மாணவர்கள், சக மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதற்காக அவர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

கொரொனாவுக்கு முன், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு, பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 1,866 ஆக இருந்த  நிலையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களின்படி, இந்த எண்ணிக்கை 3,031 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகமென்று எச்சரிக்கையுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுதொடர்பாக மாணவர்களிடம் எடுத்துக்கூறி, விளக்குவதற்கு ஆசிரியர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், ரூ.82.15 கோடியை அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பளு தூக்கும் வீராங்கனை சஞ்சிதாவுக்கு 4 ஆண்டுகள் தடை!