ஈரான் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்ததால் ஆத்திரமடைந்த மக்கள் கடந்த மாதம் 28ஆம் தேதி சாலைகளில் இறங்கி போராட தொடங்கினார்கள். அது தற்போது அரசுக்கு எதிரான போராட்டமாக மாறியிருக்கிறது. ஈரானின் தலைநகரம் தெஹ்ரான் மற்றும் மாஷாத் போன்ற பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்த போராட்டத்தின் போது பாதுகாப்பு படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் இதுவரை 116 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது, சுமார் 2600 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்க.ள் இதைத் தொடர்ந்து ஈரான் நாட்டு மக்களுக்காக ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியிருக்கிறது.
தேவைப்பட்டால் ஈரான் நாட்டு மக்களுக்கு ஆதரவாக ஈரான் அரசு படையுடன் அமெரிக்க படை போதும் எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.. எனவே ஒருபக்கம் இது அமெரிக்கா-ஈரான் மோலாகவும் உருவாகியிருக்கிறது.போராட்டம் அங்கு தீவிரமடைந்து வரும் நிலையில் இருக்கும் ஈரானில் இருக்கும் அமெரிக்கர்கள் துருக்கி வழியாக வெளியேற வேண்டும் என நேற்று அமெரிக்க அதிபர் தெரிவித்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்த ஒரு நாடும் அமெரிக்காவுடன் மேற்கொள்ளும் அனைத்து வர்த்தகத்திற்கும் 25 சதவீத வரியை செலுத்த வேண்டும். இந்த உத்தர உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்த முடிவு இறுதியானது மற்றும் உறுதியானது என தெரிவித்திருக்கிறார். கடந்த பல வருடங்களாகவே தான் சொன்னதை கேட்காத நாடுகளுக்கு டிரம்ப் அதிக அளவில் வரி விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.