Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ட்ரம்ப் எல்லாம் ஒரு ஆளே கிடையாது:கொந்தளிக்கும் ஈரான் தலைவர்

ட்ரம்ப் எல்லாம் ஒரு ஆளே கிடையாது:கொந்தளிக்கும் ஈரான் தலைவர்
, வெள்ளி, 14 ஜூன் 2019 (12:45 IST)
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எல்லாம் பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்கு தகுதியுள்ள ஆள் கிடையாது என, ஈரானில் உச்ச அதிகாரம் பெற்ற மதத் தலைவர் அலி கமெனி கூறியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

2015 ஆம் ஆண்டு அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து உள்பட பல வல்லரசு நாடுகளுடன் ஈரான் அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனல்ட் ட்ரம்ப், ஆட்சிக்கு வந்தவுடன் அமெரிக்கா அணு சக்தி  ஒப்பந்தத்திலிருந்து விலகியது.

ஏற்கனவே அமெரிக்கவுக்கும் ஈரானுக்கும் இடையே பல மோதல்கள் இருந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பொருளாதாரத் தடைகளையும் விதித்தார்.

இந்த பொருளாதாரத் தடையினால், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. இதனிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானிடம் எந்த உலக நாடுகளும் கச்சா எண்ணெய் வாங்ககூடாது என எச்சரித்தார்.

இந்த செயலால் ஆத்திரம் அடைந்துள்ள ஈரான், பாரசீக வளைகுடா பகுதியில் போர் ஏற்பட்டால், போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவொம் என எச்சரித்துள்ளது.

இதனையடுத்து அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே சமாதானம் செய்யும் முயற்சியில் ஜப்பான் இறங்கியுள்ளது. இது தொடர்பாக ஜப்பான் பிரதமர் ஷினஸோ அபே, ஈரானின் உச்ச அதிகாரம் பெற்ற மதத்தலைவர் அலி கமேனியை சந்தித்தார்.
webdunia

ஏற்கனவே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று கூறிய நிலையில், ஜப்பான் பிரதமர் அபே, ஈரான் தலைவர் கமேனியிடம் பேச்சுவார்த்தையை குறித்து கலந்துரையாடியதாக தெரிகிறது.

ஆனால்,ஈரான் தலைவர் அலி கமேனி, பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்கு ட்ரம்ப் தகுதி படைத்த ஆள் இல்லை, என ஜப்பான் பிரதமரிடம் கூறியிருக்கிறார்.
இதனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆத்திரம் அடைந்துள்ளதாக தெரிகிறது.

இதனையடுத்து ஜப்பான் பிரதமர் அபே, ஈரான் அதிபர் ரவுஹானியை சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிரச்சனையை குறித்து பேசியுள்ளார்.

இதனை குறித்து ஈரான் அதிபர் ரவுஹானி, அமேரிக்கா உட்பட எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்க மாட்டோம் என்றும், ஆனால் ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அமைதியாக இருக்கமாட்டோம் என்று கூறியிருக்கிறார்.

இந்த செய்தி உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் ஓட்டு உனக்கு கிடையாது - தவறாக நடந்துகொண்ட விஷாலிடம் சீறிய வரலக்ஷ்மி!