Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிலாவுக்கு அப்புறம் போகலாம் இப்போ இதை செய்ங்க – நாசாவை கடுப்பேற்றிய ட்ரம்ப்

நிலாவுக்கு அப்புறம் போகலாம் இப்போ இதை செய்ங்க – நாசாவை கடுப்பேற்றிய ட்ரம்ப்
, சனி, 8 ஜூன் 2019 (15:48 IST)
மீண்டும் மனிதனை நிலவுக்கு அனுப்ப நாசா விஞ்ஞானிகள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நாசாவின் இந்த செயல்பாடு குறித்து அமெரிக்க அதிபட் டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்ட செய்தி சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான வேலைகளில் நாசா மும்முரமாக இறங்கியிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் நிலவிற்கு செல்ல தேவையான இயந்திரங்களை செய்ய சில நிறுவனங்களோடு ஒப்பந்தமும் செய்திருக்கிறது நாசா. அதில் இந்தியாவை சேர்ந்த இண்டஸ் என்கிற நிறுவனத்தோடும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று டிவிட்டரில் செய்தி வெளியிட்ட ட்ரம்ப் “விஞ்ஞான வளர்ச்சிக்கென ஒதுக்கிய பணம் அனைத்தையும் நாசா நிலவுக்கு செல்வதற்காக வீணடிக்க வேண்டாம். அதை 50 வருடங்களுக்கு முன்பே நாம் செய்துவிட்டோம். இதை விட பெரிய நோக்கங்களில் கவனம் செலுத்துங்கள். செவ்வாய்(நிலவு திட்டத்தையும் சேர்த்து), பாதுகாப்பு மற்றும் விஞ்ஞானம் ஆகியவற்றுக்காக..” என அதில் தெரிவித்துள்ளார்.

தங்களது அயராத உழைப்பையும், முயற்சியையும் ட்ரம்ப் கிண்டல் செய்வதாக நாசாவை சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர் மனகசப்பு அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடியின் பொய்களுக்கு எதிராக போராடி வருகிறோம் – ராகுல் காந்தி பேச்சால் சர்ச்சை