Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் ஓட்டு உனக்கு கிடையாது - தவறாக நடந்துகொண்ட விஷாலிடம் சீறிய வரலக்ஷ்மி!

Advertiesment
என் ஓட்டு உனக்கு கிடையாது - தவறாக நடந்துகொண்ட விஷாலிடம் சீறிய வரலக்ஷ்மி!
, வெள்ளி, 14 ஜூன் 2019 (12:25 IST)
2019 - 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக விஷால் தலைமையிலான ‘பாண்டவர் அணி’யில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர்.
 
விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து இயக்குநர் கே.பாக்யராஜ்  தலைவர் பதவிக்குபோட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷும், துணைத் தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோரும் போட்டியிடுகின்றனர். 
 
இந்நிலையில் விஷாலின் பாண்டவர் அணி தேர்தல் பிரச்சாரத்திற்காக வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளனர். அதில், சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் தங்கள் பதவியை பிரயோஜனமின்றி செய்தனர். ஆனால் நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறோம் என சரத்குமாரை விமர்சித்து உருவாக்கப்பட்டுள்ள இந்த விடியோவை நடிகர் விஷால் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 
 
இதனை கண்டு கோபமடைந்த நடிகையும் சரத்குமாரின் மகளுமான வரலஷ்மி "எனது அப்பா இந்த முறை இது சம்மந்தப்பட்ட விஷயங்களில் இல்லை என்றாலும் அவரை தவறாக விமர்சித்துளீர்கள். நீங்கள் செய்த நல்லதை வெளிப்படுத்தாமல் அடுத்தவரை தவறாக விமர்சனம் செய்து உங்களை நியமாக்குகிறீர்கள். என்னுடைய ஓட்டை நீங்கள் இழந்துவிட்டீர்கள் என கோபமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் வரலட்சுமி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜிம் உடையில் கில்மா போஸ்! ஷாலு ஷம்மு தமிழ் சினிமாவின் ஸ்ரீ ரெட்டி!