Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்கா உள்ளே வந்தால் சுடுவோம்.. அப்புறம்தான் பேசுவோம்!.. டென்மார்க் எச்சரிக்கை!...

Advertiesment
denmark
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் போதைப்பொருள் பரவுவதை தடுக்காமல் அதற்கு ஆதரவாக நிற்பதாக சொல்லி வெனிசுலா அதிபர் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியது
. மேலும் கடந்த ஒரு வருட காலம் பயிற்சி எடுத்து சில நாட்களுக்கு முன்பு வெனிசுலாவுக்குள் அதிரடியாக நுழைந்து அந்த நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மடூரோ மற்றும் அதன் மனைவி ஆகியோரை அமெரிக்க சிறப்பு படையினர் சிறை பிடித்தனர். தற்போது அவர்கள் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வெனிசுலா அதிபரை கைது செய்த தொடர்பாக செய்தியாளர்கள் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம் ‘அடுத்த கிரீன்லாந்தும் எங்களுக்கு வேண்டும்’ என்று பேசியிருந்தார். கிரின்லாந்து டென்மார்க்கில் இருக்கும் ஒரு நாடு.. இதையடுத்து ‘டென்மார்க் விற்பனைக்கு அல்ல.. டென்மார்க்கில் அமெரிக்க வீரர்கள் நுழைந்தால் தளபதியின் உத்தரவுக்காக காத்திருக்காமல் அவர்களை சுட்டு தள்ளுங்கள்’ என டென்மார்க் அதிபர் சமீபத்தில் உத்தரவிட்டார்.

இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை செய்தியாளரிடம் பேசிய டிரம்ப் ‘கிரின்லாந்து அமெரிக்காவுக்கு சொந்தமாக மாற வேண்டும்.. அது மிக முக்கியமானது.. கிரின்லாந்தை எங்களுக்கு விற்க டென்மார்க் முன்வரவில்லை என்றால் நாங்களே அதை வாங்குவோம். அல்லது வழுக்கட்டாயமாக பறித்து கொள்வோம்’ என்று பேசியிருந்தார்.

மேலும் ‘கிரீன்லாந்து மீது படை எடுத்து அதை கைப்பற்றுவோம்’ என அமெரிக்க வெள்ளை மாளிகையும் கூறியிருந்தது.இந்நிலையில் டென்மார்க்கில் அமெரிக்க வீரர்கள் நுழைந்தால் முதலில் சுடுவோம்.. அதன் பிறகுதான் பேச்சுவார்த்தை நடத்துவோம்’ என டென்மார் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தற்போது எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

வெனிசுலா மற்றும் கிரீன்லாந்து ஆகிய நாடுகளில் எண்ணைவளம் அதிகமாக இருப்பதால் அதை கைப்பற்றவே அமெரிக்கா அந்த நாடுகளை எடுத்துக்கொள்ள விரும்புகிறது என உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா - பாகிஸ்தான் போர்!.. ஒரு கோடி பேரை காப்பாத்தினேன்!.. டிரம்ப் ஆவேசம்....