Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா - பாகிஸ்தான் போர்!.. ஒரு கோடி பேரை காப்பாத்தினேன்!.. டிரம்ப் ஆவேசம்....

Advertiesment
donald

Mahendran

, சனி, 10 ஜனவரி 2026 (14:29 IST)
கடந்த பல மாதங்களாகவே நான் பல போர்களை நிறுத்தி இருக்கிறேன்.. எனக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என அமெரிக்கா அதிபர் தொடர்ந்து சொல்லி வருகிறார். ஆனால் அவர் சொல்வதை யாரும் கண்டுகொள்ளவில்லை. அவருக்கு பதிலாக வேறு ஒருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது.. இதை ட்ரம்புக்கு கோபத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் ‘ பாகிஸ்தான் பிரதமர் அமெரிக்காவுக்கு வந்திருந்த போது வெளிப்படையாக ஒரு அறிக்கை வெளியிட்டார்.. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு கோடி பேர் உயிர்களை நீங்கள் காப்பாற்றி இருக்கிறீர்கள் என எனக்கு நன்றி சொல்லி இருந்தார்.

போர்களை தடுத்து நிறுத்தியது பற்றி நான் விளம்பரம் செய்து கொள்ள விரும்பவில்லை. அதே சமயம் போரை என்னைத் தவிர வேறு யாரும் தடுத்து நிறுத்தவில்லை.. எனவே நோபல் பரிசை பெற என்ன விட தகுதி வாய்ந்த ஒரு நபர் இருக்க முடியாது’ என்று கூறினார்.

மேலும் மக்களுக்கு என்னை பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் நான் 8 போர்களை தடுத்து நிறுத்தியுள்ளேன். அவற்றில் சில போர்கள் பல வருடங்களாக நீடித்து வந்த போர்கள். இந்தியா பாகிஸ்தான் போர் மட்டும் சமீபத்தில் தொடங்கியது.. 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட பின் நான் அவசர உத்தரவுகள் மூலம் அந்த போரை நிறுத்தினேன். அதன்மூலம் கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கிறேன்’ என்று பேசியிருக்கிறார்.

டிரம்பின் கருத்துக்கள் தொடர்ந்து விவாதங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே இந்தியா பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என அவர் கூறியதை இந்தியா ஏற்காமல் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது. ஆனாலும் டிரம்ப் அதையே தொடர்ந்து சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போராடும் மக்களை விட சினிமா முக்கியமா?!.. முதல்வருக்கு சீமான் கேள்வி!...