சென்னை அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளின் கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் சபாநாயகரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அதிமுக, காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டு வந்தன.
இந்த தீர்மானம் தற்போது சபாநாயகர் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், சபையில் விவாதம் நடந்து வருவதாகவும், ஒரு கட்சிக்கு ஒரு எம்எல்ஏ என்ற வகையில் சட்டப்பேரவையில் இந்த விவகாரம் குறித்து பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பேசி முடித்த பின்னர், இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதலமைச்சர் பதிலளிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது