கொரோனாவால் வேலை இழக்கும் 2.5 கோடி மக்கள்: அதிர்ச்சி தகவல்

வியாழன், 19 மார்ச் 2020 (11:14 IST)
கொரோனாவால் வேலை இழக்கும் 2.5 கோடி மக்கள்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் மட்டுமின்றி லட்சக்கணக்கான கோடி பொருளாதாரமும் சரிவடைந்துள்ளது. அனைத்து தொழில்களும் உலகம் முழுவதும் முடங்கியுள்ளதால் சுமார் 2.5 கோடி மக்கள் வேலை இழக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான தொழிலாளர் நல அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது.
 
கொரோனா பீதியால் பங்குச் சந்தைகள் வரலாறு காணாத வகையில் கடுமையாக வீழ்ச்சி அடைந்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலையும் மிக மோசமாக சரிந்துள்ளது. இதனையடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் சுமார் 2.5 கோடி மக்கள் வேலைகளை இழப்பார்கள் என்றும், இதனால் 3 கோடியே 40 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வருமான இழப்பு நேரிடும் எனவும், ஐக்கிய நாடுகள் சபைக்கான தொழிலாளர் நல அமைப்பு தெரிவித்துள்ளது.
 
ஆனாலும் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரிசெய்ய சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து உருவாக்கும் கொள்கை முடிவின் மூலம் இந்த மதிப்பீட்டு எண்ணிக்கையை விரைவில் குறைக்கலாம் என்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான தொழிலாளர் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் தங்கம் விலை சரிவு: இன்றைய நிலவரம்