அதிகரிக்கும் எண்ணிக்கை: கொரோனாவால் இந்தியர்கள் பீதி!!

வியாழன், 19 மார்ச் 2020 (10:08 IST)
இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 151லிருந்து 166 ஆக உயர்ந்துள்ளது. 
 
சீனாவின் உருவெடுத்த கொரோனா இப்போது பல நாடுகளுக்கு பரவி பீதியை கிளப்பி வருகிறது. சீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. கொரோனாவால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.  
 
உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 151லிருந்து 166ஆக உயர்ந்துள்ளது. 
 
பாதிக்கப்பட்ட் 166 பேரில் 25 பேர் வெளிநாட்டவர்கள் என்றும், மீதமுள்ள 141 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஆபாசமாக பேசிய மேனேஜர்; சரவணா ஸ்டோர்ஸ் சீல் வைக்கப்பட்டதன் பின்னணி என்ன?