ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ பரவுவதால், காடுகள் நிறைந்த பிராந்தியங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ், தாஸ்மானியா உள்ளிட்ட காடுகள் நிறைந்த பகுதியில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. இதில் பல லட்சம் ஹெக்டேர் அளவிலான நிலப்பரப்பு எரிந்து நாசமானது.
இந்நிலையில் காட்டுத்தீ பரவுவதை தடுக்கும் வகையில் தலைநகர் கான்பெர்ரா உள்பட சில முக்கிய பிராந்தியங்களில் புத்தாண்டை ஒட்டி வான வேடிக்கைகள் மற்றும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் வான வேடிக்கைக்கு தடை விதிக்கப்படவில்லை.