மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டியில் ‘முட்டாள்’ என திட்டிய மேற்பார்வையாளர்.. அழகி எடுத்த அதிரடி முடிவு..!

Siva
வெள்ளி, 7 நவம்பர் 2025 (08:20 IST)
தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டியில், போட்டியாளர்களை மேற்பார்வையாளர் ஒருவர் முட்டாள் என கூறி அவமதித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
மிஸ் யூனிவர்ஸ் தாய்லாந்தின் தலைவரான நவாத் இத்சராகிரிசைல், விளம்பரங்களில் நடிக்காதது குறித்து பேசியபோது, மெக்ஸிகோ அழகி பாத்திமா போஷ் விளக்கம் அளிக்க முன்வந்தார். அப்போது நவாத் அவரைப் பார்த்து "முட்டாள்" என்று திட்டியுள்ளார்.
 
இதனால் கோபமடைந்த பாத்திமா போஷ், தன்னை மதிக்கவில்லை என கூறி உடனடியாக அறையை விட்டு வெளியேறினார். போட்டியில் இருந்து வெளியேறினால் மீண்டும் போட்டியில் பங்கேற்க முடியாது என நவாத் எச்சரித்தும், பாத்திமாவுக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளின் அழகிகளும் வெளிநடப்பு செய்தனர்.
 
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நவாத் மன்னிப்பு கோரினார். மேலும், மிஸ் யூனிவர்ஸ் அமைப்பு, தாய்லாந்தில் நிலவும் சூழலை கண்காணிக்க மூத்த நிர்வாகி ஒருவரை அனுப்பி வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த சர்ச்சை அழகிப் போட்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments