Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உதவித்தொகை ரூ.2000.. அண்ணாமலை வாக்குறுதி

Advertiesment
Annamalai

Siva

, திங்கள், 17 பிப்ரவரி 2025 (09:48 IST)
2026 ஆம் ஆண்டு பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால், மகளிர் உரிமை தொகையை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணாடம் என்ற பகுதியில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, தற்போது மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அது ரூ.2000 ஆக உயர்த்திக் கொடுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.43,000 கோடி ஒரே தவணையில் வழங்கியுள்ளது என்றும், அந்த நிதி எங்கே? அதை என்ன செய்தார்கள்? என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி தரவில்லை என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். நிதி கிடைக்காமல் இருந்தால், இங்கு எப்படி ஆட்சி நடத்த முடியும்? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

மயிலாடுதுறையில் இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது என்றும், தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்பனை இன்னும் அமோகமாக நடைபெறுகிறது என்றும் அவர் தெரிவித்தார். கள்ளச்சாராய விற்பனையே மயிலாடுதுறை இளைஞர்களின் கொலைக்கு காரணம் என்றும் அவர் கூறினார்.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்காவில் திடீர் கனமழை.. வெள்ளத்தில் 9 பேர் பலி.. 39,000 வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு..!