Publish Date: Tue, 09 Jun 2020 (18:29 IST)
Updated Date: Tue, 09 Jun 2020 (18:30 IST)
உலகமே கொரோனா வைரஸ் பரபரப்பில் இருந்த நிலையில், கொரோனா வைரசுக்கு காரணமான சீனா திடீரென இந்தியாவின் எல்லையான லடாக் பகுதியில் ராணுவத்தை குவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பதிலுக்கு இந்திய ராணுவமும் குவிக்கப்பட்டதால் இரு நாட்டிற்கும் இடையே போர் மூளும் என்ற அச்சம் உலக நாடுகளை அச்சுறுத்தியது.
இந்த நிலையில் சமீபத்தில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் போர் தவிர்க்கப்படும் என்று கூறப்பட்டது. மேலும் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா ரஷ்யா உட்பட பல வல்லரசு நாடுகளும் குரல் கொடுத்தன என்பதும் குறிப்பிடத்தகக்து.
இதனால் சீனா திடீரென இந்த விவகாரத்தில் சற்று நேரத்தில் பின்வாங்க தொடங்கியதாகவும் கூறப்பட்டது. சீனாவின் கிழக்கு லடாக் பகுதிகளில் இருந்து சீன ராணுவம் பின்வாங்கி உள்ளதாகவும், கல்வான் பகுதியில் சீன ராணுவம் 2.5 கிமீ பின்வாங்கியதாகவும் அந்நாட்டின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
இரு நாட்டு எல்லையில் இரு நாடுகளின் படைகுவிப்பால் போர் பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில் தற்போது சீன ராணுவம் பின்வாங்கியதால் போர் பதற்றம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
webdunia
Publish Date: Tue, 09 Jun 2020 (18:29 IST)
Updated Date: Tue, 09 Jun 2020 (18:30 IST)