இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவித்த நாள் முதல் உள்ளூர் விமானங்கள் மற்றும் வெளிநாட்டு விமானங்கள் நிறுத்தப்பட்டன என்பது தெரிந்ததே. இருப்பினும் ஒரு சில நாடுகளுக்கு மட்டும் சிறப்பு விமானங்களை அனுப்பி அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மத்திய அரசு மீட்டுக் கொண்டு வந்தது என்பது தெரிந்ததே
ஆனால் கடந்த இரண்டரை மாதங்களாக சீனாவுக்கு மட்டும் விமானங்கள் இயக்கப்படவில்லை. சீனாவில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்கும் இந்தியாவில் சிக்கியுள்ள சீனர்களை அனுப்புவதற்கும் எந்த விதமான சிறப்பு விமானங்களும் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட இரண்டரை மாதங்களுக்குப் பின்னர் இந்தியாவிலிருந்து தற்போது முதல் சிறப்பு விமானம் நேற்று கிளம்பி உள்ளது. இந்த விமானத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சீனர்கள் தங்களுடைய தாய் நாட்டுக்கு சென்றனர் என்று செய்திகள் வெளியாகிஉள்ளது. முதல் முறையாக சீனாவுக்கு இயக்கப்பட்ட இந்த விமானத்தை தொடர்ந்து மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து மேலும் நான்கு சிறப்பு விமானங்கள் சீனாவுக்கு இயக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதேபோல் சீனாவில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்டு கொண்டுவர மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது