ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த 370வது பிரிவான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்தது. ஜம்மு காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் லடாக் பகுதி சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்படும் என்று தெரிகிறது
இந்த நிலையில் லடாக்கை யூனியன் பிரதேசமாக பிரிப்பதற்கு அண்டை நாடான பாகிஸ்தான் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில் தற்போது சீனாவும் தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளட்து.
சீனாவின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் இந்தியாவின் நடவடிக்கை இருப்பதாக சீனா தெரிவித்து இருந்தது. சீனாவின் எதிர்ப்பு குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில், ”இந்த விவகாரம் முழுக்க முழுக்க இந்தியாவின் உள்விவகாரம்” என்றும் இதில் சீனா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளதோடு சீனாவின் எதிர்ப்பை இந்தியா நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது