Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

Advertiesment
சாட்ஜிபிடி

Siva

, புதன், 15 அக்டோபர் 2025 (15:36 IST)
எந்த ஒரு தகவலையும் 'சாட்ஜிபிடி' (ChatGPT)யில் கேட்டு பெறலாம் என்ற வசதி இருக்கும் நிலையில், இனி 18 + கதைகளையும் கேட்கலாம் என சாட்ஜிபிடியின் உரிமையாளர் சாம் ஆல்ட்மேன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கதைகள், பாடல்கள், இசைகள் மற்றும் தொழில்நுட்ப சந்தேகங்கள் என உலகில் உள்ள எந்த வகையான கேள்விகள் என்றாலும், சாட்ஜிபிடியில் கேட்டால் பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலை உள்ளது. பலர் இப்போது கூகுளுக்கு பதிலாக இதை பயன்படுத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில், சாட்ஜிபிடி பயனர்கள் 18+ கதைகளை அதிகம் கேட்பதாகவும், ஆனால் அதற்கு தற்போது அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இனிமேல் அதற்கு அனுமதி தர உள்ளதாக ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.
 
ஆனால், அதே நேரத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட பயனர்களிடம் அவர்களின் வயதை உறுதி செய்யும் நடைமுறை அமல்படுத்தப்படும் என்றும், அவ்வாறு வயதை உறுதி செய்த பின் அவர்களின் வயதுக்கு ஏற்றவாறு பேசுவது மற்றும் 18+ கதைகளை கேட்பது உள்ளிட்ட வசதிகள் வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து இந்த வசதி அறிமுகம் செய்யப்படுவதாகவும் சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தைகளின் நலனுக்காக சேர்ந்து வாழுங்கள்: பிரிந்து வாழும் தம்பதிக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை..!