சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டிக் டாக் நிறுவனத்துக்கு உலகமெங்கும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஆனால் இந்திய சீனா எல்லையில் ஏற்பட்ட மோதலை அடுத்து சீனாவின் செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்தது. அமெரிக்காவும் டிக்டாக்கிற்கு தடைவிதித்துள்ளதால் அந்நிறுவனம் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது.
இந்நிலையில் டிக் டாக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கெவின் மேயர் ராஜினாமா செய்துள்ளார்.
அவர் ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கனத்த இதயத்துடன் வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். இப்போதைக்கு டிக் டாக் நிறுவனத்தில் பொதுமேலாளர் வனேசா பாப்ஸ் என்பவர் இடைக்கால சி இ ஓவாக பொறுப்பேற்பார் என டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.