Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

24 சீன நிறுவனங்களுக்கு தடை விதித்த அமெரிக்கா: விசா பெற முடியாது என்பதால் பரபரப்பு

24 சீன நிறுவனங்களுக்கு தடை விதித்த அமெரிக்கா: விசா பெற முடியாது என்பதால் பரபரப்பு
, வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (07:47 IST)
24 சீன நிறுவனங்களுக்கு தடை விதித்த அமெரிக்கா
கடந்த சில மாதங்களாகவே அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க அரசு அடுத்தடுத்து சீனா மீது எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன 
 
சமீபத்தில் கூட டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றும் இல்லையேல் டிக்டாக் அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அரசு எச்சரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அடுத்த அதிரடியாக 24 சீன நிறுவனங்கள் அமெரிக்காவில் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 24 சீன நிறுவனங்கள் மற்றும் அந்த நிறுவனங்களுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு பொருளாதார தடை விதிப்பதாக அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது 
 
தென் சீனக் கடலில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளில் செயற்கைத்தீவுகளை உருவாக்குவதில் இந்த 24 சீன நிறுவனங்களும் பங்கெடுத்ததாகவும் அதற்காகத்தான் இந்த தடை என்றும் அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது 
இந்த தடையை அடுத்து தடை செய்யப்பட்ட சீன நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் ஊழியர்கள் யாரும் அமெரிக்காவுக்கு செல்ல முடியாது என்றும் அவர்களுக்கு அமெரிக்க விசா வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
அமெரிக்கா தடை செய்யப்பட்ட 24 கட்டு நிறுவனங்களில் சீனாவின் கட்டுமான நிறுவனமான சீனா கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனமும் ஒன்று என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக அளவில் 2.4 கோடி, அமெரிக்காவில் மட்டும் 59 லட்சம்: கொரோனாவின் கோரத்தாண்டவம்