Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கலவரம் பண்ணிய காட்டு யானை; விரட்டியடித்த வீட்டு பூனை! – தாய்லாந்தில் விநோத சம்பவம்!

கலவரம் பண்ணிய காட்டு யானை; விரட்டியடித்த வீட்டு பூனை! – தாய்லாந்தில் விநோத சம்பவம்!
, வியாழன், 19 நவம்பர் 2020 (12:44 IST)
தாய்லாந்தில் காட்டிலிருந்து ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்த காட்டு யானையை பூனைக்குட்டி ஒன்று விரட்டியடித்த சம்பவம் வைரலாகியுள்ளது.

தாய்லாந்தின் காட்டுப்பகுதிக்கு அருகே உள்ள நகோன் நயோக் என்ற பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அவ்வபோது யானைகள் உள்ளே நுழைவதும் வனத்துறை அதிகாரிகள் அவற்றை விரட்டியடிப்பதும் தொடர்ந்து வருகிறது. அங்கு காட்டில் உள்ள பை சாலிக் என பெயரிடப்பட்ட 35 வயது காட்டு யானை அடிக்கடி மக்கள் வாழ்விடத்திற்குள் புகுந்து உணவு தேடுவதுடன், தோட்டங்களையும் துவம்சம் செய்து விட்டு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

’இந்நிலையில் நயோக்கில் உள்ள வீடு ஒன்றின் தோட்டத்தில் மரங்களை முறித்து சேட்டை செய்து கொண்டிருந்த பை சாலிக்கை கண்ட அந்த வீட்டு வளர்ப்பு பூனைக்குட்டி சிம்பா துளியும் யானைக்கு பயப்படாமல் அருகில் சென்று கத்தியுள்ளது. பூனைக்குட்டியை கண்டு யானை பின் வாங்கி காட்டுக்குள் திரும்பியுள்ளது. பூனைக்குட்டி தைரியமாக யானையை எதிர்கொண்டதை அங்குள்ளோர் படம் பிடித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

8 மாவட்டங்களுக்கு காத்திருக்குது கனமழை! – எந்தெந்த மாவட்டங்கள்?