Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நம்ம பயதான்.. ஒளிஞ்சிருக்க லட்சணம் அப்படி..! – வைரலாகும் யானைக்குட்டியின் புகைப்படம்!

Advertiesment
நம்ம பயதான்.. ஒளிஞ்சிருக்க லட்சணம் அப்படி..! – வைரலாகும் யானைக்குட்டியின் புகைப்படம்!
, வியாழன், 19 நவம்பர் 2020 (08:50 IST)
தாய்லாந்தில் கரும்புகளை தின்னும் ஆசையில் தோட்டத்திற்குள் புகுந்த யானைக்குட்டி செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தாய்லாந்து நாட்டில் சுமார் 2000 ஆயிரம் யானைகள் உள்ளன. நமது ஊர்களை போலவே அவ்வப்போது வயல்களுக்குள் புகுந்துவிடும் யானைகள் அங்குள்ள சோளம், கரும்பு போன்றவற்றை அபேஸ் செய்து கொண்டு செல்லும் சம்பவங்களும் நடந்து விடும். இதற்காக யானைகள் வரவை தடுக்க இரவிலும் காவல் பணிகளில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வடக்கு தாய்லாந்தின் சியாங் மாய் பகுதியில் உள்ள கரும்பு தோட்டம் ஒன்றில் ஏதோ சலசலப்பு கேட்க அங்கிருந்த காவலர்கள் டார்ச் லைட்டை தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறார்கள். கரும்பை சுவைக்க ஆசைப்பட்டு தனியாக வந்துள்ளது குட்டி யானை ஒன்று. கரும்பு தோட்டத்திற்கு அது புகுந்திருந்த நிலையில் ஆட்கள் சிலர் டார்ச் லைட்டோடு வருவதை கண்டதும் பயந்து ஒளிய முயற்சித்துள்ளது. உடனே அங்கிருந்த மின்கம்பம் ஒன்றின் பின்னால் சென்று ஒளிந்துள்ளது.

மின்கம்பத்தை விட பெரிதாக உள்ள யானைக்குட்டி மின்கம்பத்திற்கு பின்னால் ஒளிந்து கொள்ள முயற்சித்ததை அங்கு சென்ற காவலர்கள் போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது உலகம் முழுக்க அந்த யானைக்குட்டியின் க்யூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்களுக்கு கார் பரிசா குடுக்குறோம் சார்! – போலீஸுக்கே விபூதி அடிக்க பார்த்த மோசடி கும்பல்!