Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரண்டே நாட்களில் பதவி பறிக்கப்படுகிறதா? பீகாரில் பெரும் பரபரப்பு

இரண்டே நாட்களில் பதவி பறிக்கப்படுகிறதா? பீகாரில் பெரும் பரபரப்பு
, வியாழன், 19 நவம்பர் 2020 (07:26 IST)
இரண்டே நாட்களில் பதவி பறிக்கப்படுகிறதா?
பீகாரில் கல்வி அமைச்சர் மேவ்லால் சவுத்திரி என்பவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பதவி ஏற்ற நிலையில் தற்போது அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பதவி ஏற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கல்வி அமைச்சராகப் பதவியேற்ற மேவ்லால் சவுத்திரி என்பவர் மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது
 
கடந்த 2017 ஆம் ஆண்டு மேவ்லால் சவுத்திரி ஊழல் செய்ததாக அவர் மீது விசாரணை செய்ய அப்போதைய கவர்னரும் தற்போதைய குடியரசுத் தலைவருமான ராம் நாத் கோவிந்த் விசாரணைக்கு ஒப்புதல் அளித்ததாக தெரிகிறது 
 
இந்த நிலையில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவ்ருக்கு கல்வி அமைச்சர் பதவி கொடுத்தது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக லாலு பிரசாத் யாதவ் இது குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் 
 
இந்த நிலையில் கல்வி அமைச்சர் மேவ்லால் சவுத்திரி அவர்களை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து முதல்வர் நிதிஷ்குமார் அவரிடம் நீண்ட ஆலோசனை செய்தார். இதனை அடுத்து அவரது பதவி பறிக்கப்படுவது குறித்த செய்தி எப்போது வேண்டுமானாலும் வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூட்டம் கூட்டமாக குரங்குகள் பலி: விஷம் வைத்து கொல்லப்பட்டதா?