Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு - 2 பேர் பலி

Advertiesment
இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு - 2 பேர் பலி
, ஞாயிறு, 21 ஏப்ரல் 2019 (14:32 IST)
இலங்கையில் மீண்டும் 7வதாக நடைபெற்றுள்ள குண்டு வெடிப்பில் 2 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஈஸ்டர் தினமான இன்று காலை கொழும்பு கொச்சிக்கடை தேவாலயம், நீர்க்கொழும்பில் உள்ள தேவாலயம், சின்னமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்ரிலா ஹோட்டல் உள்ளிட்ட 6 இடங்களில் பயங்கர குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது. இதில் மக்கள் 100க் கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
webdunia
 
அந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே தற்போது மீண்டும் தெஹிவளை எனும் இடத்தில் உள்ள ஹோட்டலில் பயங்கர சத்தத்துடன் குண்டிவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். இச்சம்பவம் இலங்கை மக்களை பீதியுல் ஆழ்த்தி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பதறவைக்கும் இலங்கை தாக்குதல்: மோடியின் அதிரடி டுவீட்