Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பரபரப்பான டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி! தென்னாப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வி

Advertiesment
பரபரப்பான டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி! தென்னாப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வி
, சனி, 16 பிப்ரவரி 2019 (21:12 IST)
இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா அணி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 
தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 259 ரன்களும் எடுத்த நிலையில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எனவே இலங்கை அணி வெற்றி பெற 304 ரன்கள் தேவை என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
 
ஆனால் 110 ரன்களுக்குள் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களை இழந்துவிட்டதால் இந்த போட்டியில் தோல்வி அடையும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பின் விளையாடிய இலங்கை பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் ஆடினர். ஒரு கட்டத்தில் இலங்கை அணி 226 ரன்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்துவிட்டதால் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி உறுதி என்றே கணிக்கப்பட்டது.

webdunia
ஆனால் பெராரே பொருப்புடன் விளையாடி 153 ரன்கள் அடித்ததோடு அணியின் வெற்றிக்கு தேவையான 304 ரன்களையும் எடுத்து அசத்தி ஆட்டநாயகன் விருதினையும் பெற்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உண்மையிலேயே சேவாக் கெத்துதான்: குவியும் பாராட்டுக்கள்...