தேவாலயத்தில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு: ஈஸ்டர் தினத்தன்று ஏற்பட்ட விபரீதம்

ஞாயிறு, 21 ஏப்ரல் 2019 (10:09 IST)
இலங்கையில் தேவாலயங்களில் மற்றும் நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பலர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈஸ்டர் தினமான இன்று கிறிஸ்துவ மக்கள் தேவாலயங்களுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று இலங்கையில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வந்தது.
கொழும்பு கொச்சிக்கடை தேவாலயம், நீர்க்கொழும்பில் உள்ள தேவாலயம்  ஒரு நட்சத்திர ஹோட்டலிலும் உட்பட 2 இடங்களிலும் பயங்கர குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது. இதில் மக்கள் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்த நாச வேலையை செய்தது யார் என்பது குறித்து இலங்கை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அவன் ஆணுறுப்பை வெட்டி எறியுங்கள் ப்ளீஸ்: யாஷிகாவிற்கு ஏன் இந்த கோபம்?