Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல்முறையாக ரயிலில் இருந்து பாய்ந்த ஏவுகணை! உலகை திரும்பி பார்க்க வைத்த இந்தியாவின் சாதனை!

Advertiesment
Agni prime test

Prasanth K

, வியாழன், 25 செப்டம்பர் 2025 (09:59 IST)

இந்தியாவில் முதல்முறையாக ரயிலில் இருந்து ஏவுகணை ஏவும் திட்டம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.

 

மத்திய அரசின் DRDO நாட்டின் பாதுகாப்புக்கான அதிநவீன தளவாடங்களை தயாரிப்பதிலும், பாதுகாப்பு சோதனைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முன்னதாக சூப்பர்சோனிக் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை வெற்றிகரமாக சோதனை செய்த டிஆர்டிஓ தற்போது அக்னி ப்ரைம் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது.

 

முதல்முறையாக ரயில் மீது அமைக்கப்பட்ட மொபைல் லாஞ்சரில் இருந்து அக்னி ப்ரைம் ஏவுகணை ஏவப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்த அக்னி ப்ரைம் ஏவுகணை 2000 கிலோ மீட்டர்கள் பயணம் செய்து இலக்கை தாக்கும் வல்லமைக் கொண்டது.

 

இந்த பரிசோதனை மூலம் முதல்முறையாக ரயிலில் இருந்து ஏவுகணையை ஏவக்கூடிய திறன் கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது. டிஆர்டிஓ விஞ்ஞானிகளின் இந்த வெற்றிகரமான புதிய சாதனையை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு: அடுத்த மூன்று நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை