முகமது யூனுஸை விரைவில் விரட்டுவேன்: பங்களாதேஷ் ராணுவத் தலைவர் அதிரடி

Siva
திங்கள், 26 மே 2025 (16:25 IST)
முகமது யூனுஸை இடைக்கால ஆட்சி தலைவரிடமிருந்து அகற்ற அனைத்து வழிகளையும் ஆய்வு செய்ய தயார் நிலையில் உள்ளதாக பங்களாதேஷ் ராணுவத் தலைவர் வகர்-உஸ்-ஜமான் கூறியதாக  உளவுத்துறை வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன.
 
முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசை வீழ்த்த அரசியல் மற்றும் சட்டவழிகளில் பல்வேறு வழிகளில் பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. பங்களாதேஷ் அரசியலில் முக்கிய பிரமுகர்களான ஷேக் ஹசினா மற்றும் கலேதா சியாவை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வர ராணுவத் தலைவர் ஜமான் திட்டமிட்டுள்ளார்.
 
தேர்தல் தாமதம் அரசியலமைப்புக்கு எதிரானதாக அமையும் என்றும், அதனால் ஜனாதிபதி ஷஹபுதீனை அவசர நிலையை அறிவிக்க ராணுவம் அழுத்தம் அளிக்கக்கூடும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. அரசியலமைப்பின் பிரிவு 58 மூலம் அவசரநிலை அதிகாரங்களை ஜனாதிபதி வழங்கலாம்.
 
2007-இல் ராணுவ ஆதரவு பெற்ற இடைக்கால அரசு இதேபோல் செயல்பட்டது. யூனுஸின் திட்டங்களை நாட்டின் நிலைத்தன்மைக்கு ஆபத்தாக காட்டி ராணுவ நடவடிக்கை எடுக்க  ஜமான் தீவிரமாக செயற்படுகிறார் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனவே இடைக்கால அதிபர் யூனுஸ் எப்போது வேண்டுமானாலும் ராஜினாமா செய்வார் அல்லது நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்ஜாமீன் தராத மதுரை கோர்ட்! சுப்ரீம் கோர்ட்டில் புஸ்ஸி ஆனந்த் முயற்சி!

நம்மை அழிக்க பாகிஸ்தானுக்கு எஞ்சின் வழங்குகிறது ரஷ்யா? - பாஜக மீது காங்கிரஸ் விமர்சனம்!

பாஸ்டேகில் கட்டினால் கம்மி.. ரொக்கமாக கொடுத்தால் இரு மடங்கு கட்டணம்! - புதிய நடைமுறை!

குழந்தைகளுக்கான ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் கட்டணத்தில் திடீர் மாற்றம்.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

கரூர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நிதானத்துடன் செயல்படுகிறார்; டி.டி.வி. தினகரன் கருத்து

அடுத்த கட்டுரையில்
Show comments