Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை வந்த விமானத்தில் பெண்பயணி திடீர் மரணம்: போலீஸ் விசாரணை

Advertiesment
Flight
, புதன், 8 மார்ச் 2023 (15:22 IST)
சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த வங்கதேச பெண் பயணி ஒருவர் திடீரென மரணம் அடைந்ததை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 
 
வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் முகமது அபு - குர்ஸிதா பேகம் தம்பதியில் குர்ஸிதா பேகம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் வேலூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக இருவரும் டாக்காவில் இருந்து சென்னை வந்தனர். 
 
இந்த நிலையில் நடு வானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீரென குர்ஸிதா பேகத்திற்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை அடுத்து அவரது கணவர் பதற்றத்துடன் விமான பணி பெண்ணிடம் கூறிய நிலையில் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது 
 
சென்னை விமான நிலையத்தில் மருத்துவ குழு தயார் நிலை இருந்த நிலையில் விமானம் சென்னையில் தரை இறங்கியதும் அவரை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாடு புதிய உச்சம்: 10 மாதங்களில் 20% வளர்ச்சி..!