Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று ஒரே நாளில் ரூ.560 குறைந்தது தங்கம்.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

gold
, புதன், 8 மார்ச் 2023 (10:03 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் சரிந்துள்ளது. இன்று  ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 குறைந்ததால்  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 70 ரூபாய் சரிந்து ரூபாய் 5165.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 560 சரிந்து ரூபாய் 41320.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5527.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 44216.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 250 காசுகள் சரிந்து ரூபாய் 67.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 67500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 ஆடுகளை வைத்து இவ்வளவு பேருக்கு எப்படி பணம் கொடுக்க முடியும்? – அண்ணாமலைக்கு காயத்ரி கேள்வி!