Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை மேற்கு மாவட்ட ஐ.டி. விங் நிர்வாகிகள், கூண்டோடு விலகல்: பரபரப்பில் பாஜக..!

சென்னை மேற்கு மாவட்ட ஐ.டி. விங் நிர்வாகிகள், கூண்டோடு விலகல்: பரபரப்பில் பாஜக..!
, புதன், 8 மார்ச் 2023 (13:49 IST)
சென்னை மேற்கு மாவட்ட ஐ.டி. விங் நிர்வாகிகள், கூண்டோடு விலகியுள்ளதால் பாஜகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக சென்னை மேற்கு மாவட்ட ஐ.டி. விங் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
அனைவருக்கும்‌ வணக்கம்‌,
 
கட்சியில்‌ சில காலமாக அசாதாரண்அ சூழ்நிலை நிலவி வந்த நிலையில்‌ ஒரு சில தினங்களாக பலர்‌ என்னை தொடர்பு கொண்டு சில விளக்கங்களை கேட்க ஒரே சமயத்தில்‌ அழைக்க முற்படும்பொழுது சிலருக்கு விளக்கம்‌ அளிக்க முடியாத நிலை உருவாகிறது. ஆகவே என்னுடைய நிலையை அனைவருக்கும்‌ தெரிவிக்க வேண்டிய கடமை தற்பொழுது எனக்கு ஏற்பட்டுள்ளது.
 
பல ஆண்டுகளாக பாஜக-வில்‌ பயணித்துள்ளேன்‌. அதில்‌ கட்சி பொறுப்பு என்பது ஒரு சில ஆண்டுகள்தான்‌, பதவி என்பதை எதிர்பார்த்து பணிபுரிபவன்‌ அல்ல என்பது என்னை சுற்றி இருப்பவர்களுக்கு அனைவருக்கும்‌ தெரியும்‌. என்‌ பணிகளை அனைவரும்‌ அறிவீர்கள்‌ என்று நம்புகிறேன்‌. இத்தனை காலம்‌ எனக்கு எதிரான அச்சுறுத்தல்களையும்‌ புகார்களையும்‌ எவ்வாறு நான்‌ எதிர்கொண்டேன்‌ என்று எண்ணி பார்க்கையில்‌ எனக்கே வியப்பாக இருக்கிறது. தகுதியற்றவன்‌ என்று கூறி தரம்‌ பிரிக்கும்‌ சுயநலக்காரர்களின்‌ சூழ்ச்சிகளுக்கு பலியாக விரும்பவில்லை. துஷ்ட சக்திகளிடம்‌ இருந்து காத்துக்‌ கொள்ளும்‌ பரிகாரம்‌ ஆகவே இதை செய்கிறேன்‌. நிச்சயமாக தி.மு.க-வில்‌ இணையமாட்டேன்‌. திமுக-வை விமர்சிக்கவே பாஜக-வில்‌ இருந்து விலகுகிறேன்‌. தொடர்ந்து என்‌ மீது அன்பு காட்டி வரும்‌ நல்ல உள்ளங்கள்‌ அனைவருக்கும்‌ என்‌ உளப்பூர்வான நன்றிகள்‌.
 
என்னுடன்‌ கட்சியில்‌ இணைந்து பணி செய்து வரும்‌ அன்பு சகோதரர்களின்‌ எண்ணங்களுக்கு மதிப்பளிக்கும்‌ வகையிலும்‌ அவர்களது வலியுறுத்தலின்‌ பேரிலும்‌ அன்புக்குரிய தலைவர்‌ சிடி. நிர்மல்‌ குமார்‌ அவர்களுடன்‌ அரசியல்‌ பாதையில்‌ பயணிப்பது என்று முடிவு செய்யப்படுகிறது.
 
 இதன் மூலம் சென்னை மேற்கு மாவட்ட ஐடி விங் நிர்வாகிகள் அனைவரும் அதிமுகவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்ப்பிணிகளுக்காக இந்து அமைப்பு நடத்தும் 'கர்ப் சன்ஸ்கார்' அறிவியல் பூர்வமானதா?