Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திடீரென உக்ரைன் சென்ற ஏஞ்சலினா ஜோலி! – உக்ரைன் மக்கள் ஆச்சர்யம்!

Advertiesment
Angelina Jolie
, ஞாயிறு, 1 மே 2022 (15:54 IST)
உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி உக்ரைன் சென்றுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் மக்கள் பலர் அகதிகளாக வெளியேறும் சோகமும் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை அளித்து வருகின்றன.

இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி உக்ரைன் சென்றுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகமையின் தூதரான ஏஞ்சலினா ஜோலி உக்ரைன் சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஷ்ய படையால் தாக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பின்னர் உக்ரைனின் லிவிவ் நகரில் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்ட ஏஞ்சலினா ஜோலி, அங்கு போரால் இழப்பை சந்தித்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆறுதல் கூற சென்ற எம்.எல்.ஏவுக்கு அடி உதை: கிராம மக்கள் ஆவேசம்!