Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண்ணை கடித்து குதறிய ஆக்டோபஸ்: போட்டோ எடுக்க ஆசைப்பட்டு விபரீதம்

பெண்ணை கடித்து குதறிய ஆக்டோபஸ்: போட்டோ எடுக்க ஆசைப்பட்டு விபரீதம்
, சனி, 10 ஆகஸ்ட் 2019 (10:09 IST)
வாஷிங்க்டனில் போட்டோவுக்கு போஸ் கொடுக்க ஆக்டோபஸை தூக்கி முகத்தின் மேல் விட்டுக்கொண்ட பெண்ணை கடித்து குதறியது ஆக்டோபஸ்.

அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியை சேர்ந்தவர் ஜேமி பிஸெக்லியா. இவர் கடந்த வெள்ளிக்கிழமை டகோமா நாரவ்ஸ் என்ற பகுதியில் நடந்த மின்பிடிக்கும் போட்டியில் கலந்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவரது வலையில் ஒரு குட்டி ஆக்டோபஸ் சிக்கியிருக்கிறது. அதை வைத்து போட்டோ எடுக்க ஆசைப்பட்ட ஜேமி அதை தன்னுடைய முகத்தின் மேல் விட்டிருக்கிறார்.
webdunia

முதலில் முகத்தின் மேல் மெல்ல பரவிக்கொண்டிருந்த ஆக்டோபஸ் திடீரென அவரை கடித்து குதற ஆரம்பித்திருக்கிறது. அதிர்ச்சியடைந்த அவர் அந்த ஆக்டோபஸை முகத்திலிருந்து பிடுங்க முயற்சித்திருக்கிறார். ஆனால் அது விடாபிடியாக பிடித்துக் கொண்டிருந்திருக்கிறது. நீண்ட நேர முயற்சிக்கு பிறகு அதை முகத்திலிருந்து பிரித்து எடுத்திருக்கிறார்.

ஆக்டோபஸ் கடித்ததால் பல்வேறு இடங்களில் காயமும், அதன் விஷம் தாக்கியதால் முகத்திலிருந்து கழுத்து வரை வீக்கமும் ஏற்பட்டிருக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர் “இனிமேல் இதை நான் என் வாழ்நாளில் செய்யவே மாட்டேன். நீங்களும் செய்யாதீர்கள்” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவசரப்பட்டுட்டீங்களே தமிழிசை! – கிண்டலுக்குள்ளான தமிழிசை பேட்டி